








முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடங்கிய வருடம் 1979, இன்று 2011இல் கலவரம்.....
1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது.
தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ள வில்லை. இந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்க மறுக்கிறது.YouTube வீடியோக்களை தரவிறக்கம் (Download) செய்வதற்கு..... |
நாம் இணையத்தில் வீடியோக்களை பார்க்க அதிகமாக பயன்படுத்தும் தளம் YouTube தளம். வீடியோ நமக்கு பிடித்தால் அதை கணணியில் தரவிறக்கி வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். ஆனால் அங்கு Download Link இருக்காது. அதற்காக நாம் ஒரு மென்பொருளை நிறுவி Download பண்ண வேண்டும். அந்த மென்பொருளினால் சில நேரம் Download பண்ண முடியாது என்று Error காட்டும். ஆனால் இந்த YouTube வீடியோக்களை இணையத்தில் இருந்தே Download பண்ணலாம். இந்த வசதியை நமக்கு வழங்கும் தளம்: KEEP VID தளம். தளத்தை உபயோகிக்கும் முறை: இந்த தளத்தை உபயோகிக்க கணணினியில் JAVA மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். பின் அங்குள்ள Text Box-ல் உங்களுக்கான வீடியோ URL-ஐ கொடுத்து Download-பொத்தானை அழுத்தவும். அடுத்து வரும் விண்டோவில் Allways Run On this Site என்று கொடுங்கள். இப்போது உங்கள் வீடியோவுக்கான Download Option கிடைக்கும். இங்கு எட்டு விதமான போட்மட்டுகளில் தரவிறக்கம் செய்கின்ற ஆப்ஷன் கிடைக்கும். கைத்தொலைபேசிக்கு ஏற்ற 3GP போர்மட்டுகளிலும் தரவிறக்கம் பண்ணலாம். |
டோக்யோ: ஜப்பானிய முதலீட்டு நிறுவனங்களை ஈர்ப்பதில் சீனாவை ஓரங்கட்டிவிட்டது இந்தியா. இன்றைய தேதிக்கு தொழில் தொடங்க ஜப்பானிய நிறுவனங்களின் முதல் சாய்ஸ் இந்தியாதான். இந்தியா – சீனா இரு நாடுகளிலுமே மார்க்கெட் பொருளாதார முறை அமலுக்கு வர ஆரம்பித்தது 1992-ம் ஆண்டு முதல்தான். தாராளமயம் என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்க ஆரம்பித்தன இரு நாடுகளும். யார் அதிக முதலீட்டாளர்களை ஈர்ப்பது என்பதில் பெரும் போட்டியே நிலவியது. சலுகைகளை அள்ளி வழங்கின.
சர்வதேச பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் நிறுவனங்கள் தங்களது நேரடி முதலீட்டுக்கு ஏற்ற நாடாக சீனாவையே கருதி வந்தனர். ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, ஜப்பானிய நிறுவனங்களைக் கவர்வதில் இப்போது சீனாவை விட இந்தியாவே முதலிடத்தில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.சீனாவில் நிலவும் ஜப்பானிய விரோதப் போக்கு மற்றும் தொழிலாளருக்கான சம்பளப் பிரச்சினைகள்தான் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
அடுத்த பத்தாண்டுகளில் தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடு எது என்று 605 ஜப்பானிய நிறுவனங்களிடம் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில், 74.9 சதவீத நிறுவனங்கள் இந்தியாதான் என பதிலளித்துள்ளன. ஆனால் குறுகிய கால முதலீடு என்று வரும்போது சீனாவை 77.3 சதவீதத்தினரும், இந்தியாவை 61 சதவீதத்தினரும் தேர்வு செய்துள்ளனர்.
வியட்னாம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது