என்னை அரசியலில் ஈடுபட கூடாது என்று யாரேனும் சொன்னால் நான் வெகுண்டு எழுவேன்... அதுவே அரசாங்கம் மாணவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்று ஒரு விதிமுறை கூறினால் அந்த அரசாங்கத்தை கண்டிக்கவும் தயங்கமாட்டேன். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிதொகைகான விண்ணப்ப படிவத்தில் என்னை கோபம் கொள்ள செய்த ஒரு வரி “நான் அரசியலிலோ அல்லது வேறு அழிவு பாதையிலோ செல்லமாட்டேன் என்று உறுதிமொழி கூறுகிறேன்” இவ்வாறு அதில் அச்சிடப்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது. ஏன் ஏழை மாணவன் அரசு உதவித்தொகை பெற்று படித்து கொண்டு அரசியலிலும் ஈடு பட்டால் என்ன தவறு? அரசு இனியாது இது மாதிரியான தவறை செய்யாமல் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment