Wednesday, December 7, 2011

முல்லை பெரியாறு.....

முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடங்கிய வருடம் 1979, இன்று 2011இல் கலவரம்.....

1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது.

தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ள வில்லை. இந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்க மறுக்கிறது.

08-07-1980 ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் திரு.பழ நெடுமாறன் அவர்கள் இந்தப் பிரச்சனையை முதன்முதலாக எழுப்பினார். நீர்மட்டம் 136 அடியில் இருக்கும் வரை தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 13.5 டிஎம்சி தண்ணீர் இழப்பு ஏற்படுவதுடன் 80,000 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்ய முடியவில்லை என்பதையும் விளக்கினார். அது செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது.

தமிழகக் கிராமங்களில் தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருட்கள் தான் கேரளாவுக்கு வருகின்றன. பணப்பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்து தான் வருகிறது. ஆனால் அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியார் அணையிலிருந்து தண்ணீர்விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூட தமிழக விவசாயிக்குக் கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.

இன்று மட்டும் அல்ல என்றும் தமிழன் தன் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டான்....

No comments:

Post a Comment